நடிகர் சிம்பு மாநாடு, வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடித்துள்ள திரைப்படம் தான் “பத்து தல”. படத்தை கிருஷ்ணா இயக்கி உள்ளார். வருகின்ற மார்ச் 30 தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க மணல் மாஃபியா சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருக்கும் என்பதால்..
ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது. படத்தில் சிம்புவுடன் கைக்கோர்த்து கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். பத்து தல திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு எந்த இயக்குனருடன் எந்த தயாரிப்பாளர்களுடன் இணையப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்து வந்த நிலையில்..
நேற்று அதற்கு விடையும் கிடைத்தது. சிம்புவின் 48 வது திரைப் படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி வெற்றிகண்ட தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாகவும் மேலும் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இந்த திரைப்படத்திற்கு சுமார் 100 கோடி பட்ஜெட் ஒதுக்கி உள்ளதாம்.
இயக்குனர் தேசிங்கு பெரியசாமி முதலில் இந்த கதையை ரஜினியிடம் கூறி இருக்கிறார் அவர் தவறவிடவே அந்த கதையை தற்போது சிம்புவுக்கு சொல்லி ஓகே செய்திருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த படத்தில் சிம்பு இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது அதனால் இந்த படத்தில் காண எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் சிம்பு ஒரு முடிவு எடுத்து உள்ளார் அதாவது.. 48வது திரைப்படத்திற்கு சம்பளத்தை குறைத்து வாங்க இருக்கிறார். கமல் தயாராகிறார் என்பதற்காக இல்லை.. இதுக்கு பின்னாடி பல காரணம் இருக்கு இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் பட்சத்தில் அடுத்தடுத்த படங்களில் தனது சம்பளத்தை ராக்கெட் வேகத்தில் உயர்த்த சிம்பு பிளான் போட்டு இருக்காப்பதாக கூறப்படுகிறது.