தமிழ் சினிமாவில் பல வருடங்களாக இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு இவர் சமீபத்தில் பல்வேறு பிரச்சனைகளை கடந்து வந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தை மிக சிறப்பாக நடித்து கொடுத்து வெற்றி பெற்றுள்ளார்.
இவ்வாறு உருவான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை கொடுத்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் இடம்பெற்றுள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் சிம்புவின் நடிப்புக்கு பல்வேறு தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவ்வாறு இணைந்த இந்தக் கூட்டணி அல்லது ஏற்கனவே பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளது.
அந்தவகையில் விண்ணை தாண்டி வருவாயா அச்சம் என்பது மடமையடா போன்ற இரண்டு திரைப்படங்களையும்மே கௌதம் மேனன் அவர்கள் தான் இயக்கி இருந்தார் இந்த இரண்டு திரைப்படங்களில் ஏகப்பட்ட இளம் ரசிகர்களை சிம்பு கவர்ந்து விட்டார் என்பதுதான் உண்மை.
இந்நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தை பற்றிய ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. இவ்வாறு வெளிவந்த தகவல்களை ரசிகர்கள் மிகவும் கொண்டாடி வருவது மட்டுமில்லாமல் வைரலாக்கி வருகிறார்கள்.
அதாவது இந்த திரைப்படத்தின் டீஸர் அடுத்த வாரம் வெளி உள்ளதாகவே படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள் ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் இணையத்தில் வெளிவரவில்லை.