மீண்டும் ஈஸ்வரன் படத்திற்கு மீண்டும் வந்த பிரச்சனை.! சிம்புவிற்கு வந்த பெறும் தலைவலி

simbu like
simbu like

நடிகர் சிம்பு தற்போது மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் அதற்கு முன்பு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தபோது அவருக்கு பல பிரச்சனை அடுத்த அடுத்ததாக தொடர்ந்து வந்திருந்தது.

அந்தப் பிரச்சினை என்னவென்றால் நடிகர் சிம்பு ஒரு மரத்திலிருந்து பாம்பை பிடித்து கோணிப்பையில் போடுவதுபோல் வீடியோ காணொளி இணையதளத்தில் வைரலாக வந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் சிம்புவின் மீது புகார் கொடுத்தார்கள்.

இந்நிலையில் வனத்துறை அதிகாரி கிளமெண்ட் எடிசன் இயக்குனர் சுசீந்திரனும் படக்குழுவினரை விசாரித்தபோது இது வெறும் ரப்பர் பாம்பு நாங்கள் கம்ப்யூட்டரில் எடிட் செய்து இருக்கிறோம் என்று சுசீந்திரன் வனத்துறை அதிகாரியிடம் கூறியிருந்தார் இதற்கான ஆதாரங்கள் விரைவில் சமர்ப்பிக்கிறோம் என்றும் சொல்லியிருந்தார்.

மேலும் ஆதாரங்களை சமர்ப்பிக்க வனத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி ஒரு வாரம் ஆகியும் எந்த ஒரு ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை என்று தகவல்கள் கசிந்து வந்துள்ளது.

இந்நிலையில் வனத்துறையினர் நடிகர் சிம்பு வீட்டிற்கு சென்று  இரண்டாவது முறையாக வனத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள்.

இந்த நோட்டீஸ்க்கு கூடிய சீக்கிரம் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியிரந்தார்கள்.

ஆவணங்கள் எதுவும் தராத இருந்தால்  இந்த படக்குழுவினர் மீது வழக்கு தொடரும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.