நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த அடுத்த பல படங்களில் கமிட் ஆகி நடித்து வந்தார். இதற்கிடையில் சிம்புவின் அப்பா டி ராஜேந்திரன் உடல்நிலை காரணமாக அமெரிக்காவிற்கு சிம்பு அழைத்துச் சென்றிருந்தார்.
அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்று தற்போது டி ராஜேந்திரன் உடல்நிலை சரியாகிய நிலையில் மீண்டும் வீடு திரும்பி சிம்பு தனது படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சிம்பு நடிப்பில் உருவாகி வந்த சில படங்களின் படப்பிடிப்பு முடிவு பெற்று திரையரங்கில் வெளிவர ரெடியாக இருக்கிறது.
அந்த வகையில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வந்த வெந்து தணிந்தது காடு டத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து அண்மையில் டீசர் கூட வெளியாகிய நிலையில் படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதைத்தொடர்ந்து ஹன்சிகா சிம்பு நடிப்பில் உருவாகி இருந்த மஹா திரைப்படம் இந்த மாதம் கடைசியில் வெளியாக உள்ளது. மேலும் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறதாம். இப்படத்தின் சிம்புவின் கால்ஷீட் இன்னும் 20 நாள் மட்டுமே மீதம் உள்ளதாக கூறப்படுகின்றன.
அதனால் படத்தை கூடிய விரைவில் முடித்து இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியிட உள்ளதாக கூறப்படுகின்றன. இப்படி சிம்புவின் அடுத்தடுத்த மூன்று படங்கள் உடனுக்குடன் இந்த ஆண்டே வெளிவருவதால் சிம்பு ரசிகர்கள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.