சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் திரைப்படம் மாநாடு. இந்தப் படம் சிம்பு கேரியரில் ஒரு மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாகப் பார்க்கப்படுகிறது ஏனென்றால் சிம்பு இதுவரை பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் 100 கோடி வசூலைத் தொட்டது கிடையாது.
முதல் முறையாக இந்த திரைப்படம் அதை நிகழ்த்தி உள்ளதால் தற்போது சந்தோஷத்தில் நடிகர் சிம்பு இருக்கிறாராம். சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள சிம்பு படங்களில் நடிக்க சுமார் ஒரு படத்திற்கு 6 கோடி தான் சம்பளம் வாங்கினார். மாநாடு திரைப்படத்திற்கும் அவர் ஆறுகோடி தான் சம்பளம் வாங்கி உள்ளார்.
ஆனால் படம் பிளாக்பஸ்டர் படமாக மாறியதை அடுத்து அவரது அடுத்தடுத்த படங்களில் தற்போது சம்பளத்தை உயர்த்தி உள்ளது இந்த படத்தில் நடித்த ஒரு சிலரும் சம்பளத்தை உயர்த்தி உள்ளனர். எஸ் ஜே சூர்யா மாநாடு திரைப்படத்திற்காக 4 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் தற்போது இரண்டு கோடி உயர்த்திய 6 கோடியாக வாங்கி வருகிறார்.
கல்யாணி பிரியதர்ஷன் ஒரு கோடியிலிருந்து 2 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார் இவர்களை போலவே நடிகர் சிம்புவும் தற்போது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார். சிம்பு மாநாடு திரைப்பட 6 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் அடுத்த படத்திற்காக தற்போது 20 கோடியை சம்பளமாக உயர்த்தி உள்ளாராம்.
சம்பள விஷயம் என்பதால் சிம்பு தயாரிக்கும் லலித் அணுகி அவரிடம் தனது சம்பளத்தை உயர்த்துவது குறித்து பேசி உள்ளார் அதிர்ச்சியான லலித் அங்கிருந்து கிளம்பி உள்ளதாக கூறப்படுகிறது