நடிகர் சிம்பு கடைசியாக நடித்த மாநாடு திரைப்படம் பேரையும்,புகழையும் பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் 100 கோடி அள்ளி பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்துள்ளதால் சிம்பு செம சந்தோஷத்தில் இருந்து வருகிறார்.
மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். முதலாவதாக கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு படத்தின் சூட்டிங் பாண்டிச்சேரியில் நடத்தப்பட்டு வருகிறது.
ஷூட்டிங் தொடர்ந்து நடப்பதால் சிம்பு எங்கேயும் வெளிவர முடியாத சூழல் இருக்கிறது இந்த நிலையில் மாநாடு படக்குழு சக்சஸ் பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளது. மாநாடு படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இது இருந்தது இதில் பல பிரபலங்கள் வந்தாலும் நடிகர் சிம்பு மட்டும் வரவில்லை.
இது பலருக்கும் ஏன் வரவில்லை என பலரும் பலவிதமாக பேசியும் வருகின்றனர் அதன்படி பார்க்கையில் ஒருபக்கம் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார் என்று சொல்லுகின்றனர் மறுபக்கம் மாநாடு தொடர்பாக சிம்புவின் அப்பா டிஆர் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே சிறு உரசல் இருப்பதாக அதான் சிம்பு வரவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றன.
மறுபக்கம் சமீபகாலமாக தனது எண்ணங்களை மாற்றி உள்ள சிம்பு பார்ட்டி என்றாலே அந்த பக்கம் போவதே கிடையாது அதை மனதில் வைத்துக் கூட தவிர்த்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சக்சஸ் பார்ட்டிக்கு வராததால் வெங்கட் பிரபு missed u STR.!! Love u so much பதிவிட்டிருந்தார்.