நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன, இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் இவர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
நயன்தாரா தற்பொழுது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவரின் கால்ஷீட் கிடைப்பது என்றால் கொஞ்சம் கடினம் தான் அந்த அளவு மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர், நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.
இதற்கு முன் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல், மேலும் விஜயின் பிகில் திரைப்படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார், தற்பொழுது இவர் ஆர்ஜே பாலாஜி இயக்கிவரும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்துவருகிறார் அதுமட்டுமில்லாமல் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார்.
இப்படி அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா ஒரு காலத்தில் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார், முதலில் சிம்புவுடன் சர்ச்சையில் சிக்கினார் அதன்பிறகு பிரபுதேவா இப்படி சர்ச்சைகளில் சிக்கி தற்போது விக்னேஷ் சிவனிடன் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களின் கண்களுக்கு விருந்து கொடுத்துள்ளது, அந்த புகைப்படத்தில் நயன்தாராவுடன் சிம்பு தனுஷ் அனிருத் ஆகியோர்கள் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள்.