நடிகர் அஜித்தின் தந்தை மறைவிற்கு சிம்பு இரங்கல்.!

simbu
simbu

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். எனவே இவருடைய மறைவிற்கு திரையுலகினர் பிரபலங்கள் என பலரும் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்பு இருந்து வந்துள்ளது எனவே சிகிச்சை மேற்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருந்துள்ளார் சுப்பிரமணியம். இவருக்கு தற்பொழுது 84 வயதாகும் நிலையில் சிகிச்சை பலனின்றி தூக்கத்திலேயே இவருடைய உடல் பிரிந்தது. அந்த வகையில் இன்று அதிகாலை 4:30 அளவில் சுப்பிரமணியம் இறந்த நிலையில் சென்னையில் ஈச்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

எனவே பலரும் நேரில் சென்று அஜித்திற்கு ஆறுதல் கூறியிருந்தனர் அந்த வகையில் காஷ்மீரில் லியோ பட பிடிப்பிலிருந்த விஜய்யும் நேரில் சென்று அஜித்துக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில் தற்பொழுது இவருடைய உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அங்கு குடும்பத்தினர்களுடன் இணைந்து தன்னுடைய தந்தைக்கு அஜித் இறுதி கடமைகளை செய்து முடித்தார். மேலும் தன்னுடைய அப்பாவின் முகத்தை பார்த்து வேதனையில் கண்கலங்கி நின்றார். இப்படிப்பட்ட நிலையில் நடிகர் சிம்பு சமூக வலைதளத்தின் மூலமாக நடிகர் அஜித்தின் தந்தைக்கு மறைவு இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்; இந்த கடினமான நேரத்தை எதிர்கொள்வதற்கான ஆற்றலை அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கும் ஆறு இறைவனை பிரார்த்திக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் அஜித் தந்தையின் இறுதி அஞ்சலிக்கு குறிப்பிட்ட முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்துக் கொண்ட நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு தன்னுடைய தந்தையின் இழப்பை குடும்பத்தோடு சேர்ந்து இறுதி கடமைகளை செய்ய விரும்புகிறோம் எனவே எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.