சென்னையில் சிம்புவின் கார் முதியவர் மீது மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அதிரடியாக விசாரணை செய்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் லிட்டில் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன் இவர் சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல திரைப்படங்கள் இவரின் அடையாளம் என்றே கூறலாம். சிம்பு கடைசியாக மாநாடு திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இவருக்கு பெரும் திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது.
இந்த நிலையில் தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சிம்புவின் கார் தேனாம்பேட்டை இளங்கோ சாலை அருகே சென்று கொண்டிருந்தது அப்போது வயதான மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் ஊர்ந்து சாலையை கடக்க முயன்றுள்ளார் இதனை கவனிக்காத சிம்புவின் கார் ஓட்டுநர் முதியவர் முனுசாமி மீது மோதி உள்ளார் இதனால் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துள்ளார்.
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் சம்பவ இடத்திலிருந்து விரைந்து ஓடியுள்ளார் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார் அப்பொழுது அந்தக் கார் சிலம்பரசனுக்கு சொந்தமான கார் என்றும் இந்த காரை ஓட்டி வந்த செல்வம் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அதேபோல் இந்த விபத்து நடந்த போது காரில் சிலம்பரசனின் தந்தை டி ராஜேந்திரன் பயணித்ததாகவும் தகவல் வெளியானது இந்த விபத்திற்கும் டி ராஜேந்திரன் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் போக்குவரத்து போலீசார் கூறியுள்ளார்கள்.