தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு இவர் தனது சிறு வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் சிம்புவின் உடல் எடை கூடிய பிறகு சரிவர எந்த ஒரு திரைப்படம் ஓடவில்லை இதனால் அவருடைய மார்க்கெட் குறைந்தது.
இந்த நிலையில் அவர் விஸ்வரூபம் எடுக்கும் வகையில் அமைந்த படம் மாநாடு இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் நடிகர் சிம்புவின் சினிமா வாழ்க்கையை திரும்பி தந்தது என்று தான் சொல்ல வேண்டும். அதனைத் தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அடுத்ததாக பத்து தல திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் சிம்பு அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் மூலம் பிரபலமான பிரபல நடிகை ஒருவர் எனக்கும் சிம்புவுக்கும் கல்யாணம் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அதாவது விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் “oo solriya oo oohm solriya” என்ற நிகழ்ச்சி தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதனை தொடர்ந்து இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் பிரபல நடிகை ஐஸ்வர்யா தத்தா, சக்ஷி அகர்வால், மற்றும் அனிதா சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினியான பிரியங்கா அந்த நிகழ்ச்சியில் காலத்து கொண்டுள்ள பிக் பாஸ் நடிகைகளிடம் உங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்ட மிக நகைச்சுவையான செய்தி எது என்று கேட்டிருக்கிறார் அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா தத்தா எனக்கும் சிம்புவுக்கும் திருமணம் என்று வந்த செய்தி என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு நடிகை சாக்ஷி அகர்வால் அவர்களிடம் கேட்டபோது நான் விராட் கோலியின் முதல் கேர்ள் ஃபிரண்ட் என்று சொன்னது தான் எனக்கு நகைச்சுவையான செய்தி என்று கூறியுள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ.