சிம்பு, தனுஷ் படங்கள் உட்பட டிசம்பரில் வெளியாகும் 4 மாஸ் திரைப்படங்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். கடந்த சில மாதங்களாக மாஸ் நடிகர்கள் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே வருகிறது. இதை ரசிகர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இந்த மாதம் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் நானே வருவேன் என்ற திரைப்படமும் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்த மாதம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் தொடர்ச்சியாக நான்கு படங்கள் வெளியாகியுள்ளது.
அதனை தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் அருண் விஜயின் பார்டர் திரைப்படமும், நயன்தாராவின் கோல்ட் திரைப்படமும், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் உட்பட 4 மாஷ் திரைப்படங்கள் அக்டோபர் மாதத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் வருகின்ற டிசம்பர் மாதம் தனுஷ் மற்றும் சிம்பு படங்கள் உட்பட 4 திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெளியான தகவலின் படி தனுஷின் வாத்தி திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதியும், சிம்புவின் பத்து தல திரைப்படம் டிசம்பர் 14ஆம் தேதியும், அவதார் 2 டிசம்பர் 16ஆம் தேதியும், ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் ருத்ரன் திரைப்படம் டிசம்பர் 23ஆம் தேதியும் வெளியாகியுள்ளது.
மேலும் சிம்பு நடித்துள்ள பத்து தலை திரைப்படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்து உள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.
டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகயுள்ள ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார் மற்றும் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் கதிரேசன் அவர்களின் இயக்கத்தில் உருவான திரைப்படம். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாபை நிலவி வருகிறது.
மொத்தத்தில் டிசம்பர் மாதம் சிம்பு மற்றும் தனுசு ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.