திரையில் தொகுப்பாளராக களமிறங்கும் நடிகர் சிம்பு..! அதுவும் இந்த ரியாலிட்டி ஷோவிலா..!

simbu-anchor

simbu anchoring latest program: தற்போது இந்த கொரோனா வைரஸ் ஆனது நம் நாட்டில் தலைவிரித்து ஆடுவது காரணமாக தற்போது பல்வேறு விஷயங்களிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு நடிகர்களும் நடிகைகளும் படவாய்ப்பு இல்லாமல் பெருமளவு தவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த ஊரடங்கு காலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மிகவும் பிரபலமான ஒரு நடிகர்தான் சிம்பு. இவர் இந்த நேரத்தில் தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்து விட்டு அவருடைய ஸ்டைல் நடைமுறை என அனைத்திலும் மாற்றம் கொடுத்து திரைஉலகில் பிரபலமான நடிகராக வளர்ந்து வருகிறார்.

சமீபத்தில் தான் இவருடைய நடிப்பில் ஈஸ்வரன் எனும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது இந்நிலையில் இதனை தொடர்ந்து தன்னுடைய மாநாடு திரைப்படத்தில் மிக விறுவிறுப்பாக நடித்துக் கொண்டு வருகிறார். மேலும் நடிகர் சிம்பு பாத்து தல எனும் திரைப்படத்திலும் நடிக்க உள்ளாராம்.

இந்நிலையில் நடிகர் சிம்பு survivor 2021 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது இந்த நிகழ்ச்சியில் இதுவரை 40 சீசன்கள் முடிவடைந்துள்ளது மேலும் இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் வரை கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு அந்த போட்டியாளர்கள் அனைவரையும் ஒரு தீவு போன்ற இடத்தில் விட்டு விடுவார்கள் பின்னர் அவர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்படும். இந்த டாஸ்க்கில் எலிமினேஷன் ஆகாமல்  வெற்றி பெறுபவர் தான் வெற்றியாளர். இந்தப் போட்டியானது சுமார் 90 முதல் 100 நாட்கள் வரை நடைபெறும்.

இப்படிப்பட்ட பிரம்மாண்டமான நிகழ்ச்சியை நமது நடிகர் சிம்பு தற்சமயம் தொகுத்து வழங்கப் போவதாக உள்ளாராம்.

sarvivor
sarvivor