சேட்டை ஏதும் செய்யாமல் இருந்தால் போதும் சிம்பு – அஜித், விஜய் இடத்தை பிடிக்கலாம் பிரபல பத்திரிகையாளர் காரசாரம்.!.!

simbu
simbu

சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்ததோடு மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பாடகராகவும் நடன கலைஞராகவும் தன்னை மாற்றிக்கொண்டு பயணித்ததால் அசுர வளர்ச்சியை நோக்கி ஓடிக் கொண்டு இருந்தவர் நடிகர் சிம்பு. இவரது திறமையை பார்த்து தமிழ் சினிமா வியப்பில் ஆழ்ந்த காலம் உண்டு.

ஆனால் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் வெற்றியை பெறவில்லை. என்பது ஒரு பக்கம் மறுபக்கம் படத்தின் சூட்டிங்கில் ஒழுங்காக கலந்து கொள்வது இல்லை மேலும் படத்தில் கமிட் ஆகிவிட்டு பாதியிலேயே போட்டுவிடுவது மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக சினிமாவில் நடிக்காமல் விட்டுவிட்டார்.

இதனால் சிம்புவின் சினிமா கேரியர் குளோஸ் என நினைத்தனர் ஆனால் சிம்புவோ திடீரென தனது உடல் எடையை குறைத்து ஆன்மீக வழி மாறி தற்போது படங்களில் நடித்து வருகிறார் அண்மையில் வெங்கட் பிரபுவுடன் இவர் கைகொடுத்த நடித்த மாநாடு திரைப்படம் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த திரைப்படம் இதுவரை 70 கோடிக்கு மேல அள்ளி புதிய சாதனை படைத்தது மேலும் நன்றாகவே ஓடிக் கொண்டு இருக்கிறது. சிம்புவின் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக ஆரம்பித்துள்ளது இனி தொடர்ந்து அவர் சிறந்த படங்களில் நடித்தாலே போதும் அந்த படம் ஆட்டோமேட்டிக்காக வெற்றியை ருசிக்கும் அவரது ரசிகர்கள் தற்போது மீண்டு உள்ளனர் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த சமயத்தில் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரெங்கநாதன் கூறியது சிம்பு தனது பயணத்தை தொடங்கி விட்டார் ஆனால் இப்படி இருக்கின்ற நிலையில் மீண்டும் சிம்பு எதையும் செய்யாமல் வாலை சுருட்டி கொண்டு இருக்கின்ற இடம் தெரியாமல் படங்களில் நடித்தாலே போதும் அவர் அஜித்-விஜய் லெவலுக்கு வருவார் என அவர் கூறினார்.