நடிகர் சிம்பு முன்பு போல் இல்லாமல் பல படங்களில் கமிட்டாகி ஒவ்வொன்றாக முடிந்து வருகிறார் அந்த வகையில் ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து கௌதம் மேனன் உடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது . இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு பத்து தல திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக கொரோனா குமார் திரைப்படத்தில் நடிப்பார் என முன்பே சொல்லப்பட்டது.
ஆனால் தற்பொழுது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் கொரோனா குமார் படத்தில் நடிக்க மாட்டார் என சொல்லப்படுகிறது. மாநாடு திரைப்படத்திற்கு முன்பாகவே இந்த படத்தில் அவர் கமிட் ஆகிவிட்டார் மேலும் அப்பொழுது சம்பளம் கம்மியாக கேட்டிருந்தாராம் மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சம்பளத்தை சிம்பு.
உயர்த்தி உள்ளதால் தனக்கு சம்பளம் அதிகமாக கொடுத்தால் இந்த படத்தில் நடிப்பேன் என்பது போல பேசி இருக்கின்றனர் முதலில் ஒப்பு கொண்ட பட குழு திடீரென என்ன நினைத்து ஏதோ தெரியவில்லை சிம்புவை கழட்டி விட்டதாக கூறப்படுகிறது.
தற்போது நமக்கு கிடைக்கும் தகவல் என்னவென்றால் கொரோனா குமார் திரைப்படத்தில் சிம்பு நடிக்கவில்லை என்பது மட்டும் உறுதி. கொரோனா குமார் படத்தின் இயக்குனர் தற்பொழுது ஆர் ஜே பாலாஜியை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இருப்பதாக கூறப்படுகிறது இதுவும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை ஆனால் இந்த தகவல் தற்போது தீயாய் பரவி வருகிறது.