இப்பொழுது இருக்கும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து உள்ள நடிகைகள் என்றால் அது சின்னத்திரை நடிகைகள் தான் என்று நாம் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் அந்த அளவிற்கு அவர்களை தொடர்ந்து வருகின்றனர் ரசிகர்கள் சின்னத்திரை நடிகைகளுக்கு எப்படி ரசிகர் பட்டாளம் உள்ளனரோ அதுபோல தொகுப்பாளராக பணியாற்றி வரும் பிரபலங்களுக்கும் அதிக ரசிகர்கள் இருந்தார்கள் அப்படி அதிகபடியான ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்தவர் தான் விஜயசாரதி.
இவரது பெயரை சொன்னால் கூட பிரபலங்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கு தெரியுமோ தெரியாதோ ஆனால் இவரை நீங்கள் கேட்ட பாடல் விஜயசாரதி என்று சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும். நீங்க கேட்டால் பாடல் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மீடியா உலகிற்கு அறிமுகமானார். நீங்க கேட்ட பாடலின் நிகழ்ச்சி சிறப்பு என்னவென்றால் பல ஊர்களுக்கு சென்று அங்கு உள்ள சிறப்புகளை பற்றி பேசுவதே முக்கிய அம்சம்.
இந்த நிகழ்ச்சியை அடுத்து அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் இவர் பவளக்கொடி என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் அதன்பின் இவர் சின்னத்திரையில் பல சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அந்த வகையில் இவர் சித்தி, கோலங்கள், விக்ரமாதித்தியன் போன்ற சீரியல்களில் நடித்து மேலும் பிரபலமடைந்தார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த சைத்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இவர் பிரபல தொலைக்காட்சியான சன் டிவி தொலைக்காட்சியில் தலைமையாராக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் அப்போது பார்த்த மாதிரியே இப்பொழுதும் இருக்கிறார் என புகைப்படத்தை உற்றுநோக்கி பார்த்து வருகின்றனர்.