சில்க் ஸ்மிதா கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிப்பதை விட இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் ஒரே டேக்கில் சிறப்பாக நடித்து விடுவாராம் – பிரபல நடிகை போட்ட புதிய பதிவு.

silk-sumitha
silk-sumitha

சினிமாவிற்கு தற்போது மாடலிங் துறையில் இருந்தும் பல்வேறு நடிகைகள் வலம் வருகின்றனர் ஆனால் அவர்கள் எடுத்த உடனேயே கவர்ச்சியை காட்டி நாமும் மிகப் பெரிய ஸ்டார் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்கள் ஆனால் அது நடந்தும் கூட மக்கள் மத்தியில் நிரந்தர இடத்தை பிடிப்பார்களா என்றால் அது கஷ்டம் தான்.

ஏனென்றால் இவரைப் போல இன்னொருவர் கவர்ச்சியில் வலம் வந்து கொண்டே இருப்பார்கள் ஆனால் ஒருவரை மட்டும் ரசிகர்கள் இப்பொழுதும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் அந்த நடிகை வேறுயாருமல்ல மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள நடிகை சில்க் ஸ்மிதா தான். இவர் தற்பொழுது நம்முடன் இல்லாவிட்டாலும் இவரது கவர்ச்சி மற்றும் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

படத்தின் கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சியை காட்டி நடிப்பதில் இவருக்கு ஈடு இணை எவருமில்லை என்பது குறிப்பிடத்தக்கது மேலும் நடிப்பிலும் பின்னி எடுப்பார் இதனால் குறைந்தது 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இப்படி நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியானது.

இது ரசிகர்களை பெரிதும் சோகம் அடைய செய்தது. இப்படி இருக்க இரு தினங்களுக்கு முன்பு அவரது நினைவு நாள் என்பதால் சில்க் ஸ்மிதா பற்றிய சில செய்திகள் தீயாய் பரவி வந்த நிலையில் முன்னாள் நடிகையான ராதா அவர்கள் சில்க்ஸ்மிதா பற்றி ஒரு எமோஷனலான பதிவு போட்டுள்ளார்.

அதில் அவர் கூறியது : என்னுடைய முதல் படத்தில் நடித்திருந்தார் எனக்கு தெரிஞ்சி கிளாமர் காட்சிகளில் மிக ஈசியாக நடிப்பவர் அவர்தான் மேலும் எமோஷனல் காட்சிகளிலும் அசால்டாக நடிபார். அதுவும் ஒரே டேக்கில் நடித்து இருப்பார் சில்க் ஸ்மிதா அவரை போன்ற ஒரு நடிகையை இழந்தது கஷ்டமாக இருக்கிறது என கூறி பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படங்களும் இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது இதோ அந்த புகைப்படம்.