பிரபல இயக்குனரின் வீட்டில் பொட்டி பாம்பாக அடங்கி கிடந்த சில்க் ஸ்மிதா.. பல வருட ரகசியத்தை பகிர்ந்த முக்கிய பிரபலம்

silk-sumitha
silk-sumitha

80 காலகட்டங்களில் மிகப்பெரிய கிளாமர் நடிகையாக பார்க்கப்பட்டவர் சில்க் ஸ்மிதா. அந்த சமயத்தில் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படத்தின் கதைக்கு ஏற்ப நடிகர், நடிகைகளை தேர்வு செய்கிறார்களோ.. இல்லையோ.. முதலில் சில்க் ஸ்மிதாவை கமீட் செய்ய அவரது வீட்டு முன் காத்திருப்பார்களாம் அந்த அளவிற்கு பிரபலமானவராக தென்பட்டார்.

இவர் படத்தில் பெரிதும் ஐட்டம் டான்ஸ் மற்றும் கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்து வந்ததால் ரசிகர்களுக்கு அப்பொழுது ரொம்பவும் பிடித்த நடிகையாக இவர் இருந்தார் திரையுலகில் ஜொலித்த இவர் திடீரென இயற்கை எய்தினார். இது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. இப்பொழுது சில்க் ஸ்மிதா நம்முடன் இல்லை என்றாலும் அவரைப் பற்றிய பேச்சுக்கள் தினம் தோறும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில் இயக்குனரும், நடிகருமான கங்கை அமரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில்க் ஸ்மிதா பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது.. நானும் சில்க் ஸ்மிதாவும் நெருங்கிய நண்பர்கள் என்றும் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் தனக்கு சில்க் ஸ்மிதா போன் செய்து வீட்டுக்கு வரட்டுமா என கேட்பார்.

மேலும் கூறுகையில் வீட்டுக்கு வந்து தன் மனைவியோடு சமையல் செய்வது சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருப்பார் எனவும் அப்பொழுது பிரேம்ஜி மிகவும் சின்ன பையனாக இருப்பான். தனது மகனை பார்த்து. இவனை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டுமா என்று கேட்பார் எனவும் நானும் ஓகே என தலையாட்டி சிரிப்பேன்.

இந்த நாட்களை  தன்னால் மறக்கவே முடியாது என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் தன்னை எங்கு பார்த்தாலும் சில்க் ஓடி வந்து கட்டி பிடித்துக் கொள்வார், தன்னை மச்சான் என்று சில்க் ஸ்மிதா செல்லமாக அழைப்பார் என தெரிவித்தார். அந்த அளவிற்கு தன் மீதும் தன் குடும்பத்தின் மீதும் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்தார்.

அவரை பார்த்தால் ஒரு கிராமத்து பெண் போலவே தெரியாது இன்று வரை அவரைப் போல் ஆடையிலும் சரி முக அலங்காரத்திலும் சரி யாராலும் ரசித்து ரசித்து தன்னை மெருகேற்றவே முடியாது என கூறினார். சில்க் ஸ்மிதா அந்த அளவுக்கு தன்னைத்தானே மெதுவாக செதுக்கி செதுக்கி சினிமாவிற்காகவே படைக்கப்பட்டவள் போல் மாறினார் எனவும் சில்க் இறந்த பொழுது தன்னால் ஜீரணிக்க முடியவில்லை ஒரு வார காலம் காய்ச்சலில் படுத்திவிட்டேன் அந்த என தனக்குத் தெரிந்த உண்மைகளைப் பகிருந்தார்.