நடிகைகள் சினிமா உலகில் ஆட்சி செய்தாலும் ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு பின் அவர்கள் தனது மார்க்கெட்டை இழந்து ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள். ஆனால் ஒரு நடிகை மட்டும் சினிமா ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் தனது மார்க்கெட்டை இறக்காமல் செம மாஸ் காட்டி உள்ளவர் வேறு யாருமல்ல அவர்தான் சில்க் ஸ்மிதா.
சில்க் ஸ்மிதா சினிமா உலகில் ஒரு ஹீரோயின் கூட கிடையாது ஐட்டம் பாடலுக்கு ஆடுவது கிளாமர் சீன்களில் வந்து போவது இப்படித்தான் படங்களில் நடித்துள்ளார் ஆனால் அப்படி நடித்ததற்காகவே அவரை சுற்றி கோடான கோடி ரசிகர்கள் படையெடுத்தனர் மேலும் உச்ச நட்சத்திரமாகவும் சில்க் ஸ்மிதா மாறினார்.
இதனால் அவரது சினிமா பயணம் நீண்டுகொண்டே போனது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டாப் நடிகர்கள் கூட அதிர்ச்சி ஆகினர் இருந்ததாம் ஒரு பாடலுக்கு சும்மா ஆடிவிட்டு செல்லும் சில்க் ஸ்மிதாவுக்கு இவ்வளவு ரசிகர்களா என்பது தான் சினிமா ஆரம்பத்தில் ஆணாதிக்கம் தான் அதிகம் இருந்தது ஆனால் அப்போதே சில்க் ஸ்மிதா யாருக்கும் பயப்படாமல் சும்மா கெத்து காட்டுவாராம்.
இப்படி ஒரு முறை மிகப் பெரிய ஒரு சம்பவம் நடந்தது சிவாஜி நடித்த லாரி டிரைவர் ராஜாக்கண்ணு என்ற திரைப்படத்தில் சில்க் ஸ்மிதாவும் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தாராம் அப்பொழுது அந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகை சில்க் சுமிதா முன்னதாக போய் ஒரு சேரில் உட்கார்ந்திருந்தார் பின் சிவாஜி அங்கு வர எழுந்து நின்று மரியாதை கூட கொடுக்கவில்லையாம்.
அங்கு இருந்தவர்களுக்கு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது பின் பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் சிவாஜிகணேசன் வரும்பொழுது எந்திரிக்கவே இல்லை என கேட்டார் அதற்கு அவர் நான் அப்போது அந்த படத்தின் பாடலுக்கு ஒரு குட்டையான ட்ரெஸ்ஸை போட்டு இருந்தேன் அப்போது எழுந்திருந்தாள் அது நன்றாக இருந்திருக்காது என நினைத்து தான் நான் உட்கார்ந்திருந்தேன் தவிர வேறு எதுவும் கிடையாது என கூறினார். இதை சிவாஜிகணேசனும் அப்பொழுது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை சில்க் ஸ்மிதாவும் தான் மரியாதை இல்லாமல் நடந்து கொள்ளும் எண்ணமும் கிடையாது.