பனைமரம் மாதிரி உயரம்.. பழைய அஞ்சு பைசா மாதிரி மூஞ்சி என்னால எல்லாம் இவரோட நடிக்க முடியாது.! சத்யராஜை கெஞ்ச வைத்த நடிகை.!

silk-sumitha
silk-sumitha

நடிகர் சத்யராஜின் உருவத்தையும், உயரத்தையும் பார்த்துவிட்டு கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா நடிக்க மறுத்து இருக்கும் நிலையில் அது குறித்த தகவல் தற்பொழுது தெரியவந்துள்ளது. விஜயலட்சுமி என்ற இயற்பெயரைக் கொண்ட சில்க் ஸ்மிதா ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர் குடும்பத்தின் வறுமை காரணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.

அதன் பிறகு இந்திய சினிமாவில் நடிக்க ஆரம்பித்த நிலையில் கால் சீட் கிடைக்காத அளவிற்கு தொடர்ந்து நடித்து வந்தார் மேலும் இவருடைய நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது தமிழ்நாட்டில் பல கவர்ச்சி நடிகைகள் இருந்து வந்தாலும் சிலுக்கு ஸ்மிதா மட்டும் மிகவும் அழகாகவும் சரியான உடல் அளவு உடனும் கண்களை கவரும் வகையில் இருந்ததால் தனக்கென ரசிகர்களை உருவாக்கினார்.

ஒரு கட்டத்தில் பலரின் கனவு கன்னியாக இருந்து வந்த இவர் தமிழில் அனுசக்ரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார். இவ்வாறு இவருடைய முதல் படத்திலேயே சில்க் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் ரசிகர்களால் பாராட்டப்பட்டது எனவே ஸ்மிதா என்ற பெயருடன் சில்க் என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டார்.

அதன் பிறகு தான் இவரை சில்க் ஸ்மிதா என அழைக்க ஆரம்பித்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் மேலும் அப்போது தனித்துவமான இயக்குனராக வலம் வந்த பாலு மகேந்திரா இயக்கத்தில் நடிக்கும் அனைத்து நடிகைகளும் மிகவும் அழகாக தெரிவர் அப்படி பேரழகியாக மூன்றாம் பிறை படத்தில் சில்க் ஸ்மிதா தெரிந்தார் இந்த படத்தில் பூரணம் ஜோடியாக நடித்திருந்தார்.

இவ்வாறு இவருடைய இவருடைய கவர்ச்சியான உடல் அமைப்பு, கவர்ச்சியான குரல் அனைத்து திசைகளிலும் ஜொலிக்க ஆரம்பித்த நிலையில் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார் இது தமிழ் சினிமாவையே உலுக்கியது. சிலுக்கு ஸ்மிதா நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் அனைத்து தயாரிப்பாளர்களும் சிலுக்கு ஸ்மிதா நடிக்கவில்லை என்றாலும் ஒரு பாடலுக்காவது நடனமாட வைத்து விட வேண்டும் அப்படி என்றால் தான் படம் வெற்றி பெறும் என்ற நிலைமையில் இருந்து வந்தது.

இந்நிலையில் சில்க் ஸ்மிதாவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை சத்யராஜுக்கு இருந்ததாம் எனவே கனம் கோர்ட்டார் அவர்களே அந்த படத்தில் நடிப்பதற்காக சிலுக்கு சுமிதாவை கேட்டுள்ளார். ஆனால் சிலுக்கு சுமிதா நான் நடிக்க மாட்டேன் அவர் மூஞ்ச பாருங்க உயரத்தை பாருங்கள் என்னால் நடிக்க முடியாது என்ன ஸ்டெட்டாக கூறியுள்ளாராம்.

பிறகு அந்த படத்தை இயக்குனர் அவன் பெரிய ஜமீன்தார் குடும்பத்து பையன் அவனை இவ்வளவு கெஞ்ச வைக்கிறியேமா என பல விஷயங்களை கூறி பிறகு ஒத்துக்க வைத்துள்ளார். அதன் பிறகு தான் சிலுக்கு ஸ்மிதா, சத்யராஜ் உடன் நடிக்க ஒப்புக்கொண்டாராம் பிறகு சத்யராஜின் குணநலன்களை பார்த்து இவரை போல் இப்படி நினைத்து விட்டோமே எனவும் வருத்தப்பட்டாராம் சில்க் ஸ்மிதா இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் பகிர்ந்துக்கொண்டார்.