மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு ஹிட்டடித்த பாடல்கள் இவைதான்.! இதோ வீடியோ

silk-smitha
silk-smitha

ஆந்திர மாநிலத்தில் விஜயலட்சுமி ஆக பிறந்த சில்க் ஸ்மிதா நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர், திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கை ஒத்து வராததால் பிரிந்து விட்டார்கள். அதன்பிறகு நடிகையாக வேண்டும் என்ற கனவுகளுடன் சென்னை வந்தார்.

அதன்பிறகு வாய்ப்புகளுக்காக தேடி அலைந்த சில்க் ஸ்மிதா ஒரு காலகட்டத்தில் ஏவிஎம் ஸ்டூடியோ அவருக்கு எதிரில் சந்தித்த இயக்குனர் வினுசக்கரவர்த்தி, வண்டி சக்கரம் என்ற திரைப்படத்தில் சாராய வியாபாரி பெண்ணாக நடிக்க வைத்தார்.

தன்னுடைய திரை பெயரை மாற்றிக்கொண்ட ஸ்மிதா முதல் திரைப்படமே விஜயலட்சுமிக்கு ஹிட் அடித்ததால் பேரும் புகழும் கிடைத்தது. அதனால் தன்னுடைய பெயருக்கு முன்பு சில்க் என பெயரையும் சேர்த்துக் கொண்டார். தான்  நடித்த முதல் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் சில்க் ஸ்மிதா அளவிற்கு வாய்ப்புகள் குவிய தொடங்கின.

சொக்கவைக்கும் கண்களுடன் திராவிட நிறமும் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. ஒரு காலகட்டத்தில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களிலும் சில்க் ஸ்மிதா நடிக்க வேண்டும் என இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் விரும்பினார்கள் அந்தளவு புகழின் உச்சத்தில் இருந்தார், அதுமட்டுமில்லாமல் குறுகிய காலகட்டத்திலேயே 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் சில்க் ஸ்மிதா.

சில்க் ஸ்மிதா தான் நடித்த பெரும்பாலான படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களாக தான் வாய்ப்புகள் வழங்கப்பட்டது, தனது நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற கனவு சில்க்ஸ்மிதா விறகு கிடைக்கவில்லை. மிகக்குறுகிய வாய்ப்புகளே நடிக்க கிடைத்தாலும் கிடைத்த வாய்ப்புகளில் தன்னுடைய அசால்ட்டான நடிப்பால் சக கலைஞர்களை துவம்சம் செய்தார்.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகிய அலைகள் ஓய்வதில்லை, நேற்று பெய்த மழையில், மூன்றாம்பிறை என சில்க் ஸ்மிதா கவர்ச்சியாக நடித்து நடிப்பில் முத்திரை பதித்தார். பல மர்மங்களால் நிறைந்த சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை தாடிக்கார டாக்டர் என்ற பெயர் இன்றளவும் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் போனது.

ஏனென்றால் புகழின் உச்சத்தில் இருந்த சில்க் ஸ்மிதா மரணமடைந்து ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் யாரும் பெற்றுக்கொள்ள ஆள் இல்லாத அனாதை பிணமாக வைக்கப்பட்டிருந்தார் சில்க் ஸ்மிதா. அதன் பிறகு அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்து சில்க் சுமிதாவின் உடலை கைப்பற்றி கொண்டார்கள்.

புகழின் உச்சத்தில் இருக்கும் சில்க்ஸ்மிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை அது கொலைதான் என உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. என்னதான் புகழின் உச்சத்தில் இருந்த சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை பல மர்மங்களை ஒளித்து வைத்திருந்தாலும் சில்க் ஸ்மிதா மரணத்தின் மர்மங்களை கண்டுபிடிக்க முடியாமல் மண்ணோடு மண்ணாக போனது.

இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் அவர் நடித்த பல திரைப்படங்களில் சில பாடல்களும் ஹிட் கொடுத்துள்ளது அந்த பாடல்கள் என்ன என்பதை சில்க் ஸ்மிதாவின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு காணலாம்.

அடியே மனம் நில்லுனா நிக்காதடி.

நானே ராஜா

சச்சி நா  கடுபுனா

தர்வாஜா பந்த் பந்த்

ஓபனா உய்யலா