80,90 காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவை தன் கண்ட்ரோலில் வைத்திருந்த ஒரே நடிகை சில்க் ஸ்மிதா தான். இவர் ஹீரோயின்னாக இல்லாவிடிலும் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம், ஐட்டம் டான்ஸ் மற்றும் கிளாமர் காட்சிகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
இவருக்கான ரசிகர்களைப் பட்டாளத்தை பார்த்து டாப் நடிகைகளை அதிர்ந்து போனாராம். அந்த அளவிற்கு பேமஸ் ஆக இருந்தார் மேலும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சில்க்ஸ்மிதாவை தான் முதலில் கமிட் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது திரை உலகில் வெற்றி மேல் வெற்றியை கண்டு வந்த இவருக்கு பலரும் காதல் கடிதம் எழுதுவது..
மற்றும் பரிசுப் பொருட்கள் என அள்ளி கொடுத்திருக்கின்றனர் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நிஜ வாழ்க்கையில் தான் உண்டு என இருந்து வந்தார். இப்படி ஓடிக் கொண்டிருந்த சில்க் ஸ்மிதா ஒருவர் மீது மட்டும் காதல் வயப்பட்டு இருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. சில்க் ஸ்மிதா காதல் வயப்பட்டது வேறு யார் மீதும் அல்ல வேலு பிரபாகரன் தான்.
இவர் 80 காலகட்டத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி பின் சில்க் ஸ்மிதாவின் பிக்பாக்கெட் படத்தில் கேமரா மேன்னாக பணியாற்றினார். இவரை அப்பொழுது சில்க் ஸ்மிதா வியந்து பார்த்துள்ளார். அதற்கு காரணம் அவர் பார்ப்பதற்கு அழகாகவும், செம்ம சூப்பராக உடை அணிந்து இருப்பாராம் மேலும் டாப் நடிகர்களே அப்பொழுது இவரிடம் தான் உடை எப்படி அழகாக போடுகிறது என்று ஐடியாவை கேட்பார்களாம் அந்த அளவிற்கு அப்பொழுது வளர்ந்திருந்தாலும், தனது திறமை வெளிக்காட்டி பெரிய அளவில் மக்கள் மத்தியில் நல்ல பெயரையும் அவர் பெற்ற இருந்தாராம்.
இதையெல்லாம் பார்த்து சில்க் ஸ்மிதா அவர் மீது காதலில் விழுந்தாராம். வேலு பிரபாகரன் சில்க் ஸ்மிதா தன் மீது வைத்த காதலை என்னால் இன்று வரை மறக்க முடியாது என சமீபத்திய ஒரு பேட்டியில் கூறினார் இவர் 60 வயதில் 30 வயது நடிகையை திருமணம் செய்து கொண்டு தற்பொழுது வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.