நான் செத்தா நீ வருவியா? அர்ஜுனிடம் பரிதாபமாக கேட்ட சில்க் ஸ்மிதா.. உருக்கமான தகவல்..!

arjun
arjun

Actress Silk Smitha: சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து ஏராளமான கவர்ச்சி படங்களில் நடித்து தற்பொழுது உயிருடன் இல்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. சில்க் ஸ்மிதா ஏராளமான பிரபலங்கள் மனதையும் கவர்ந்திருக்கிறார் அப்படி பலரும் சில்க் ஸ்மிதா குறித்த ஏராளமான தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் நடிகர் அர்ஜுனிடம் நான் செத்தால் நீயும் வருவியா என மிகவும் பரிதாபமாக கேட்டிருக்கிறார் இவ்வாறு இது குறித்த உருக்கமான தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை சில்க் ஸ்மிதா 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ் திரைவுலகில் இந்த துயர சம்பவம் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் தோட்டா பாவாநாராயணா சில்க் ஸ்மிதாவின் இறுதிச்சடங்கு இருக்கு நடிகர் ஒருவர் வந்தார் என்றால் அது அர்ஜுன் மட்டும் தான் என கூறியுள்ளார். ஒரு படப்பிடிப்பின் பொழுது நடிகை சில்க் ஸ்மிதா நடிகர் அர்ஜுனிடம் தான் இறந்து போனால் எனது சாவுக்கு நீ வருவாயா என கேட்டுள்ளார்.

இதைக் கேட்ட அர்ஜுன் என்ன பேச்சு இதெல்லாம் இன்று பதில் அளித்துள்ளார். இந்த விஷயத்தை அர்ஜுன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையென தோட்டா பாவாநாராயணா கூறியுள்ளார். இந்த சம்பவம் நடந்தால் சில நாட்களுக்குப் பிறகு சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்ட செய்தியை கேட்ட ஜூன் மிகவும் இடிந்து போய் உள்ளார்.

மேலும் நேரடியாக இறுதிச்சடங்கு வந்த அர்ஜுன் சில்க் ஸ்மிதாவின் உடலுக்கு மலர்மாலை அணிந்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இவருடைய இறுதிச் சடங்கிற்கு வந்த ஒரே நடிகர் அர்ஜுன் தான் என பத்திரிக்கையாளர் பாவாநாராயணா கூறியுள்ளார்.