sigappu rojakkal : கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படத்தை கொடுத்து வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. அதேபோல் பாரதிராஜாவின் திரைப்படம் என்றாலே யதார்த்த நடிப்பும் கிராமத்து கதையும் காதலும் கண்டிப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் பாரதிராஜா திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.
அப்படிதான் கிழக்கே போகும் ரயில் 16 வயதினிலே ஆகிய இரண்டு திரைப்படமும் கிராமத்து பின்னணியில் கிராமத்துக் கதையில் உருவான திரைப்படம். இதில் கிழக்கே போகும் ரயில் திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் திரையரங்கில் ஓடியது. அதேபோல் கிராமத்தில் இருந்து வந்தாலும் இவர் கிராமத்து சப்ஜெக்ட் திரைப்படம் மட்டும் தான் எடுக்க முடியும் என சில வதந்திகள் வெளியானது.
மகாவை அடிக்க கை ஓங்கிய ராஜலட்சுமி.! அடிக்க உரிமை இல்லை என அம்மாவையே எதிர்த்து நிற்கும் சூர்யா..!
இவருக்கு சிட்டி சப்ஜெக்ட் கதை சரியாக வராது என கூறினார்கள். அந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தான் பாரதிராஜா எடுத்த திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள் திகில் கலந்த திரையரங்கில் உருவான இந்த திரைப்படத்தில் கமலஹாசன் ஸ்ரீதேவி ஆகியவர்கள் நடித்திருந்தார்கள்.
கமல் இந்த திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பெண்களை குறி வைத்து கொள்ளும் சைக்கோ வில்லன் திரைப்படம் தான். சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் தரமான சம்பவம் பாரதிராஜா செய்திருப்பார் இந்த திரைப்படத்தின் மூலம் சிட்டி சப்ஜெக்ட் திரைப்படமும் தனக்கு அத்துபடி என நிரூபித்தார் இந்த திரைப்படம் குறித்து பலருக்கும் தெரியாத தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் மர்மத்தையும் திகிலையும் வர வைக்க ஒரு கருப்பு பூனை ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கும் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் அந்த பூனையை அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் அந்த பூனையால் படத்திற்கு வந்த பிரச்சனை குறித்து தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.
படத்தில் வரும் கருப்பு பூனை ஒருவரிடம் இருந்து வாங்கி படமாக்க பட்டது. மூன்றாவது நாள் அந்த பூனையை காணவில்லை எவ்வளவு தேடியும் அந்த பூனை கிடைக்கவில்லை. உடனே அந்த பூனையின் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு விட்டார். பின்னர் அவரை சமாதானப்படுத்தி கேசை வாபஸ் வாங்க வைத்தார்களாம். அந்த பூனை இன்று வரை எங்கே போனது என்று தெரியவில்லை..