பாப்பா தலைய ஆட்டிட்டு போறத பாத்தா விருப்பப்பட்டு போன மாதிரி தான் இருக்கு.! வெளியானது சித்தார்த்தின் சித்தா ட்ரெய்லர்

siddha movie
siddha movie

Siddha Movie Trailer: சித்தார்த் சித்தா என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற படங்களை இயக்கிய அருண்குமார் சித்தார்த்தை வைத்து சித்தா படத்தினை இயக்கியுள்ளார்.

மேலும் சித்தார்த் தனது இடாகி என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கும் நிலையில் இதற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் தனது அண்ணன் மகளின் பாசத்திற்காக சித்தார்த் போராடும் வகைகள் இந்த படத்தின் கதை அமைந்துள்ளது.

இதற்கு முன்பு சித்தா படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் கமலஹாசன் வெளியிட்டார் இதனை அடுத்து வருகின்ற 28ஆம் தேதி அன்று சித்தா படம் வெளியாக இருக்கும் நிலையில் அதற்கான ட்ரெய்லரை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.

மதுரைக்கு அருகில் இருக்கும் சில இடங்களில் படம் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆரம்பத்தில் அண்ணன் மகள் மீதான பாசம், நிமிஷா சஜயனுடன் காதல் என அமைதியாக தொடங்கும் ட்ரெய்லர் தொடர்ந்து அடுத்தடுத்து சீரியசாக மாறுகிறது. காணாமல் போன அண்ணனின் மகளை தேடி சித்தார் அலைந்து கொண்டிருக்கிறார்.

இந்த தேடலின் பொழுது அவர் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க இதில் தபு நினன் தாஸ் பின்னணி இசை பதைபதைக்க வைக்கிறது. இவ்வாறு ஒரு எதிர்பார்ப்புடனும் சுவாரசியத்துடனும் உருவாகி இருக்கும் சித்தா படத்தின் டிரைலர் இதோ.