சன் டிவிக்கு ரீஎன்ட்ரி கொடுக்கும் சித்தி 2 சீரியல் நடிகர் கவின்.!

nanthan
nanthan

பொதுவாக தற்பொழுது எல்லாம் வெள்ளித்திரை நடிகர் விடவும் சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது மேலும் இவர்களுக்கு விரைவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு இடம் கிடைத்து விடுகிறது அந்த வகையில் வந்தாள் ஸ்ரீதேவி என்ற திரைப்படத்தின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் நடிகர் நந்தன்.

இவர் பெரும் விமர்சனம் பெற்ற லட்சுமி என்ற குறும்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் சித்தி 2 சீரியலில் கவினாக நடித்ததன் மூலம் சின்னத்திரையில் பெரும் புகழை சம்பாதித்தார். இந்த சீரியலில் கவின் மற்றும் வெண்பா இவர்களுடைய ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இவர்களுக்கு உடைய காதல், ரொமான்ஸ் ஆகியவை ரசிகர்களை மேலும் கவர்ந்த காரணத்தினால் இந்த சீரியல் நடித்த அனைவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த நந்தன் தற்பொழுது சின்ன திரையில் வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.

இவர் பிரபலமடைவதற்கு பல தடைகளை தாண்டி தான் வந்துள்ளார்.  ஏனென்றால் பாலுமகேந்திரா படத்தில் நந்தன் நடிக்க இருந்தது ஆனால் பாலுமகேந்திரா படம் பாதியில் டிராப் ஆகியது.  இதனால் இவர் வெள்ளிதிரையில் நடிக்க வேண்டும் என்று எண்ணியது தோல்வியடைந்தது. பிறகு மனம் தளராத இவர் கட்டம் என்ற திரைப்படத்தில் நடித்தார்  ஆனால் அத்திரைப்படம் சில பிரச்சனைகளால் ரிலீஸ் ஆகவில்லை.

பிறகு சில ரியாலிட்டி ஷோக்களில் துணை இயக்குனராக பணிபுரிந்தார் அப்போதுதான் தனது நண்பனான டைரக்டர் சர்ஜின் எடுத்த லட்சுமி என்ற குறும்படத்தில் நடித்திருந்தார்.  பிறகு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்தாள் ஸ்ரீதேவி என்ற சீரியலில் நடித்திருந்தார்.

இதனைத்தொடரில் சித்தார்த் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த சித்திரம் பேசுதடி சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சித்தி 2 சீரியலில் கவின் ரோலில் நடித்தார்.

nanthitha
nanthitha

இந்த சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த சீரியல் சமீபத்தில் முடிந்த நிலையில் தற்பொழுது மீண்டும் புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது இந்த சீரியலில் நந்தனுக்கு ஜோடியாக நடிப்பது யார்.? என்ற தகவல் இன்னும் வெளிவரவில்லை.