பொதுவாக ஏராளமான நடிகைகள் தங்களுடைய இளமையான காலகட்டத்தில் தொடர்ந்து ஹீரோயினாக பல படங்களில் நடித்து வந்து வயதான பிறகு சினிமாவில் இருந்து வெளியேறுபவர்கள் இருக்கிறார்கள் அதே போல் வயதானாலும் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்களும் இருக்கிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் தற்பொழுது பிரபல நடிகை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அது பற்றிய தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
அதாவது 80 காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சித்தாரா. இவருக்கு தற்பொழுது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது மேலும் இவர் தென்னிந்திய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழினை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து பிசியாக இருந்து வருகிறார் அதேபோல் திரைப்படங்களினை தொடர்ந்து மெகா சீரியல் களிலும் நடித்து வருகிறார் சித்தாரா. இவர் 1989ஆம் ஆண்டு வெளிவந்த புது புது அர்த்தங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இந்த படத்தின் வெற்றியினை தொடர்ந்து உன்னை சொல்லி குற்றமில்லை, புது புது ராகங்கள், புது வசந்தம், புரியாத புதிர், ஒரு வீடு இரு வாசல் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். வயதான பிறகு சீரியல்களிலும் நடித்து வந்த இவர் கடந்த 2014ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த பூஜை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து 2018ஆம் ஆண்டு வெளியான நாகேஷ் திரையரங்கம் படத்திலும் ஹீரோ ஆதி அர்ஜுனனுக்கு அம்மா கேரக்டரில் நடித்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது. இந்த வருடத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த இவர் தற்பொழுது புதிதாக உருவாக இருக்கும் பிரபல படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம் சித்தாரா.
மிகவும் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் இயக்குனர் விக்ரமின் மகன் விஜய் கனிஷ்கா நடிக்க இருக்கிறார். இவரைத் தொடர்ந்து அந்த படத்தில் கே எஸ் ரவிக்குமார், சரத்குமார், முனிஸ் காந்த், ரெடி கிங்ஸ்லி, கே ஜி எஃப் வில்லன் ராமச்சந்திரா, மயன் கோபி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.