சித்தார்த் நடித்திருக்கும் சித்தா படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Chithha
Chithha

Chithha Box Office: சித்தார்த் நடிப்பில் சித்தா திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருந்து வரும் சித்தார்த் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது சித்தார்த் நடிப்பில் சித்தா படம் வெளியாகிவுள்ளது. நேற்று வெளியான இந்த படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நிமிஷா, அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உள்ளிட்ட பலரும்  நடித்துள்ளார்கள். சித்தா படம் அண்ணன், அண்ணி, அண்ணனின் குழந்தை என அழகான கதைய அம்சத்துடன் உருவாகியுள்ளது.

அண்ணனின் மகள் மீது சித்தார்த் மிகவும் அன்புடன் இருந்து வருகிறார் இந்த சமயத்தில் அண்ணன் திடீரென இறந்து விட இந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு சித்தார்த்திற்கு வருகிறது. இந்த சமயத்தில் அண்ணனின் மகள் காணாமல் போக அவரை தேடி சித்தார்த் அலைந்து கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இவ்வாறு இதைத் தாண்டி எப்படி தனது அண்ணன் மகளை காப்பாற்றுகிறார் என்பதே படத்தின்கதை. விறுவிறுப்பான காட்சிகளுடன் உருவாகி இருக்கும் சித்தா படம் நேற்று வெளியான நிலையில் நல்ல விமர்சனங்களுடன்  திரையரங்குகளில் வெற்றி நடைப் போட்டு வருகிறது. அந்த வகையில் இந்த படத்தினை பார்த்துவிட்டு உலக நாயகன் கமலஹாசன் படக்குழுவினர்களை பாராட்டி உள்ளார்.

மேலும் கண்டிப்பாக இந்த படத்தினை அனைவரும் பார்க்க வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து தற்பொழுது சித்தா படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் ரூபாய் 1 கோடி முதல் ரூபாய் 2.6 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று ராகவாலாரன்ஸின் சந்திரமுகி 2, ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் இறைவன் போன்ற திரைப்படங்கள் வெளியானதால் சித்தார்த்தின் சித்தா திரைப்படம் குறைவான வசூலையே பெற்றுள்ளது. தொடர்ந்து இனிமேல் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் வசூலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.