‘பிச்சைக்காரன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்.. 8 வருடங்கள் கழித்து உருவான கதை

pichaikkaran
pichaikkaran

Pichaikkaran movie: சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்பொழுது ஹீரோவாக கலக்கி வருபவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து வித்தியாசமான கதைய அம்சமுள்ள திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் இவருடைய நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் தான் பிச்சைக்காரன். இந்த படத்தில் முதலில் சித்தார்த்த்தான் நடிக்க இருந்திருக்கிறார். ஆனால் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போயிருக்கிறது அது குறித்து பார்க்கலாம்.

இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பிச்சைக்காரன். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அம்மா சென்டிமென்ட் மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இந்தப் படத்தின் வெற்றினை தொடர்ந்து சமீபத்தில் பிச்சைக்காரன் 2 படம் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் சமீப பேட்டியில் சித்தார்த் மற்றும் பிச்சைக்காரன் பட இயக்குனர் சசி இருவரும் பேட்டி அளித்திருந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, முதலில் சித்தார்த்தியிடம் தான் பிச்சைக்காரன் படத்தின் ஒன் லைன் கதையை இயக்குனர் சசி கூறி இருக்கிறார். ஆனால் அப்பொழுது சித்தார்த்த கதை எனக்கு புரியவில்லை வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

பிச்சைக்காரன் படத்தினை பார்த்துவிட்டு ஏதோ ஒரு காட்சி மட்டும் ஞாபகம் வந்ததால் இயக்குனர் சசியை சந்தித்து என்கிட்ட சொன்ன கதை இது இல்லை தான என்று கேட்க அந்த படம் தான் என்று இயக்குனர் சொல்ல சித்தார்த் அதிர்ச்சி அடைந்தாராம். உன்னிடம் சொன்னது கரு நீ ஓகே சொல்லி இருந்தா அது பிச்சைக்காரனா மாறி இருக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த பட கதையை சித்தார்த்திடம் கடந்த 2008ஆம் ஆண்டு இயக்குனர் சசி கூறி இருக்கிறார். ஆனால் அப்பொழுது நான் கடவுள் போல் இருந்திருக்கிறது அதன் பிறகு கதை முழுக்க மாற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் இதுதான் படக் கதை என்பது அப்பொழுதே  தெரிந்திருந்தால் சித்தார்த் கண்டிப்பாக நடித்திருப்பார் என்பதில் இந்த மாற்றமும் இல்லை.