தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிபிராஜ் இவர் சமீபத்தில் டபுள் மீனிங் புரோடக்சன் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் ஒரு திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை இயக்குனர் கிஷோர் அவர்கள் தான் இயக்கி வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் நடிகர் சிபிராஜ் ஜோடியாக நடிகை தன்யா ரவிச்சந்திரன் நடித்துவருகிறார் மேலும் இத்திரைப்படத்தை அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு இவர்தான் திரைக்கதை ஆசிரியர் கூட.
பொதுவாக தமிழ் சினிமாவில் மிக வெகுநாட்களாக ஒரு வெற்றி திரைப்படத்தையாவது கொடுத்துவிட வேண்டும் என்று அயராது போராடி வருபவர் தான் நடிகர் சிபிராஜ் இவர் சமீபத்தில் நடிக்கும் திரைப்படத்தில் எப்படியாவது ஹிட்டு கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஒவ்வொரு விஷயங்களையும் மிக ஆழ்ந்து ஆராய்ந்து அதன் பின்னரே முடிவு செய்து வருகிறார்.
அந்தவகையில் இத்திரைப்படத்திற்கு கூட இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் திரைப்படத்தின் டீசர் ஆனால் அது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
மேலும் இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை இணையத்தில் கூறுவது வழக்கம் தான் அந்த வகையில் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள் மேலும் இந்த டீசரில் பார்வையற்றவர்களும் பார்க்கும் அளவிற்கு பின்னணி குரலுடன் பிரத்தியோக டீசர் ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்கள்.
இவ்வாறு அனைத்து ரசிகர் பெருமக்களையும் கவரும் வகையில் வெளிவந்த இந்த டீசர் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பாராட்டும் புகழும் கிடைத்து வருகிறது. இவ்வாறு டீசருக்கு படக்குழுவினர்கள் இவ்வளவு சிந்தித்து செயல் படுவதன் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
மேலும் இத் திரைப்படமானது வருகின்ற டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர்கள் தெரிவித்திருந்த நிலையில் இந்த திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள்.