கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக ஓடிடி வழியாக பல திரைப்படங்கள் வெளி வந்தது சமீப காலங்களாக தான் தியேட்டர்கள் திறக்கப்பட்டு தொடர்ந்து பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான சிபி ராஜ் கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள மாயோன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடைபெற்று முடிந்துவிட்டது. எனவே படக்குழுவினர்கள் போஸ்ட் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீசர் சற்றுு முன் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
மிகவும் பயங்கரமாக உள்ள ஒரு கோவிலில் மர்மமான நிகழ்வுகள் நடைபெறுகிறது அந்த நிகழ்ச்சிகளை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டம் தனியாக யாருக்கும் தெரியாமல் அந்தக் கோவிலுக்கு சென்றுள்ளார்கள்.அதற்காக இவர்கள் என்ன முயற்சி செய்கிறார்கள் அந்த கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் மாயோன் படத்தின் கதை என்று இந்த டீசரை பார்க்கும் பொழுது தெரிகிறது.
கற்பனைக்கும் அப்பாற்பட்ட அமானுஷ்யங்கள் அந்த கோவிலில் இருக்குது தம்பி என்ற வாசகத்துடன் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள காட்சிகள் பார்ப்போரின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.இதனைத் தொடர்ந்து இத்திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் மிரட்டலான இசை இத்திரைப்படத்தின் மிகப்பெரிய ஒரு அங்கமாக திகழ்கிறது.
இந்த திரைப்படத்தில் சிபிராஜி, தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கேஎஸ் ரவிகுமார், பகவதி பெருமாள் உட்பட பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளார்கள். இவர்களைத் தொடர்ந்து இளையராஜா இசையமைக்க ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.