வெள்ளித்திரையில் அதிக திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று தற்போது வரை விளங்கி வருபவர் சியான் விக்ரம் இவரது நடிப்பில் தற்போது கோப்ரா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை நாம் பார்த்தோம்.
இந்நிலையில் சியான் விக்ரமை பற்றி ஒரு விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது அந்த விஷயம் என்னவென்று கேட்டால் சியான் விக்ரம் தனது இருமுகன் படத்தின் புரமோஷனுக்காக கேரளா சென்ற போது அவரை கல்லூரி மாணவர்கள் சுற்றிச் சூழ்ந்து விட்டார்கள்.
அந்தக் கூட்டத்தில் ஒரு ரசிகர் உங்களது முதல் காதலி யார் என்று கேட்டதற்கு சியான் விக்ரம் கொஞ்சம் கூட யோசிக்காமல் எனது எட்டாம் வகுப்பு கணக்கு டீச்சர் தான் என்று பதில் கூறினார்.
அவர் பேசும் போது எடுத்த வீடியோ காணொளியானது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகிய சியான் விக்ரம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது இந்த வீடியோ காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவிற்காக லைக், ஷேர் என இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த வீடியோ காணொளியை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.