தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு பெயர் போன நடிகர்களில் ஒருவர் நடிகர் விக்ரம். படத்தின் கதையை எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் எந்த ரோலாக இருந்தாலும் அதை ஏற்று நடித்து தனது திறமையை வெளிக் காட்டக் கூடியவர் இதுவரை அவர் நடித்த படங்களில் கூட பார்த்திருப்போம் சினிமா உலகில் இப்படி ஓடிக்கொண்டு இருந்தாலும்..
சமீப காலமாக இவரது படங்கள் பெரிய அளவில் ஹிட் அடிக்காதல் வெற்றியை கொடுக்க தற்போது தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இப்பொழுது நடிகர் விக்ரம் கையில் பொன்னியின் செல்வன், கோப்ரா, துருவ நட்சத்திரம் மற்றும் மகான் ஆகிய படங்கள் கையில் இருக்கின்றன.
இதில் முதலாவதாக வருகின்ற பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி மகான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் விக்ரமுடன் சேர்ந்து துரு விக்ரம் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் பலர் நடித்துள்ளனர். இந்த படம் நிச்சயம் ஒரு திருப்புமுனை படமாக நடிகர் விக்ரமுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் விக்ரம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் CSK அணியின் வீரருமான தல தோனியை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது. ஏற்கனவே தல தோனியை விஜய் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
இணைய தள பக்கத்தில் தீயாய் பரவிய நிலையில் இப்பொழுது நடிகர் விக்ரம் தோனியை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரசிகர்கள் மேலும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..