அப்பா வயதுள்ள நடிகருடன் ஜோடி போட இருக்கிறாரா ஸ்ருதிஹாசன்.!

வாரிசு நடிகர், நடிகைகளாக அறிமுகமான பலர் தொடர்ந்து சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல் தள்ளாடி வருகிறார்கள். அந்த வகையில் ஒரு சில நடிகர், நடிகைகள் மட்டுமே கிடைத்த வாய்ப்புகளை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து நிலைத்திருக்க முடிகிறது.

அந்த வகையில் ஒருவர் தான் நடிகை சுருதிஹாசன் இவர் கமலஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தாலும் கிடைத்த வாய்ப்புகளை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தற்பொழுது இசையமைப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இன்னைத் தொடர்ந்து இவர் டோலிவுட், பாலிவுட்,கோலிவுட் என்று பல திரை உலகில் நடித்து முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். அந்த வகையில் இவருக்கு தொடர்ந்து ஏராளமான பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தனது அப்பா வயது இருக்கும் முன்னணி நடிகர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.இதனை ஏற்றுக் கொள்வாரா என்ற கேள்வி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்தவகையில் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் பாலகிருஷ்ணா.

இவர் நடிக்கவுள்ள இத்திரைப்படத்தை இயக்குனர் கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ளார். இதற்கு முன்பு இவர் இயக்கத்தில் நடிகை ஸ்ருதிஹாசன்  பல்பு, கிராக் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் . அந்தவகையில் கோபிநாத் நடிகை சுருதிஹாசனை அணுகி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க  கூறி உள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் தெலுங்கு முன்னணி நடிகரான பாலகிருஷ்ணாவுக்கு தற்போது 60 வயதாகிறது எனவே சுருதிஹாசன் இவருக்கு ஜோடியாக நடிக்க மாட்டாரா இல்லை நடிப்பாரா என்று தெரியவில்லை.

ஆனால் இயக்குனர் கோபிசந் மாலினேநி இயக்கியிருந்த கிராக் திரைப்படம் சுருதிஹாசனுக்கு டோலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.எனவே இத்திரைப்படத்தில்  பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.