மாடலிங் வந்தபொழுது டீன் ஏஜில் எடுத்த சுருதிஹாசனின் முதல் போட்டோ ஷூட்.! வைரலாகும் புகைப்படம்

sruthi-haasan
sruthi-haasan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன் இவருக்கு சுருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் இவர்கள் இருவரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள். இதில் இளைய மகள் சுருதிஹாசன் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இவர் முதன்முதலில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகிய ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகம் ஆனார். ஹீரோயினாக  ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக  சிறுவயதில் இருந்தே நடித்து வருகிறார். சுருதிஹாசன் பல திரைப் படங்களில் நடித்திருந்தாலும் எந்த ஒரு திரைப்படமும் சொல்லிக்கொள்ளும்படி மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை.

அதனால் சுருதிஹாசன் அவர்கலை ராசியில்லாத நடிகை என கூறி வந்தார்கள் கடைசியாக ஸ்ருதிஹாசன் சிங்கம்-3 திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும்  அவரை காணமுடியவில்லை. இந்த நிலையில்சுருதிஹாசனின் தந்தை கமல்ஹாசன் இயக்கி நடித்து வந்த பல்ராம் நாயுடு என்ற திரைப்படத்தில் இவர் நடிக்க இருந்தது ஆனால் அந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது தற்பொழுது சுருதிஹாசனுக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் இருந்து வருகிறார்.

sruthi haasan
sruthi haasan

இந்தநிலையில் மற்றவர்களைப்போல் சுருதிகாசன் அவர்களும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருவது வழக்கம் அந்த வகையில் 17 வயதில் மாடலிங் துறையில் இருந்த போது ஒரு மாடலாக எடுத்த போட்டோ ஷூட் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 17 வயதில் ஒல்லியாக இருக்கிறீர்கள் இப்பொழுது ஆனால் வேறு மாதிரி இருக்கிறீர்கள் எனக் கூறி வருகிறார்கள். நடிகை சுருதிஹாசன் தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக பெரும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனால் சுருதிஹாசன் அவர்களைப் பலரும் கேலி செய்து வந்தார்கள். அதற்கு பதிலளித்த சுருதிஹாசன் நான் சர்ஜரி செய்து கொண்டேன் தான் நான் அதற்காக வருத்தப்படவில்லை அசிங்க படவும் இல்லை அதனை நான் எப்போதாவது விளம்பரப்படுத்தி இருக்கிறேனா.? இல்லை அதற்கு எதிராக நான் இருக்கிறேனா.? என கூறினார்.

sruthi haasan
sruthi haasan