தன்னுடைய காதலருக்கு உருக உருக காதலர் தின வாழ்த்துக்களை கூறிய ஸ்ருதிஹாசன்.! என் சூரியனும் நீங்கள்தான்..

sruti-hassan
sruti-hassan

உலகம் முழுவதும் தற்பொழுது காதலர் தினத்தை பலரும் கொண்டாடி வரும் நிலையில் ஏராளமான பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய காதலர்களை அறிமுகப்படுத்துவது மற்றும் தங்களுடைய காதலர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது நடிகை ஸ்ருதிஹாசன் காதலர் தினத்தை ஒட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலர் குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் தொடர்ந்து ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் எனவே இவரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பின்பற்றி வரும் நிலையில் அந்த இன்ஸ்டாகிராமில் வேலை செய்வது, உணவு சமைத்தல், மற்றும் கிளாமரான உடை, மேக்கப், பேஷன் என பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

sruthi hassan 2
sruthi hassan 2

இதனை அடுத்து மறுபுறம் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக லாபம் திரைப்படம் தமிழில் வெளிவந்தது. இந்த படத்தினை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் பிரபல முன்னணி நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து சலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தெலுங்கு, கன்னடம் என ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது.

sruthi hassan
sruthi hassan

மேலும் தமிழ், மலையாளம், ஹிந்தியில் டப் செய்யப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை கேஜிஎஃப் படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். மேலும் புவன் கௌடா ஒளிப்பதிவு செய்ய ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இதனை அடுத்து பாலகிருஷ்ணன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வீர சிம்மா ரெட்டி திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

sruthi hassan 1
sruthi hassan 1

இந்நிலையில் சுருதிஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலர் சாந்தனு ஹசாரிக்காவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து நீங்கள் சிறந்தவர், என்னுடைய இதயம் உங்களிடம் உள்ளது என் சிந்தனையும், நீங்கள்தான் என் சூரியனும் நீங்கள்தான், இந்த உலகில் அதிர்ஷ்டசாலி பெண் நான் தான் என பதிவிட்டுள்ளார்.