இரண்டு நாட்களாக இது குறித்து தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ஏராளமான வதந்திகளும் பரவி வருகிறது. எனவே அனைத்திற்கும் பதில் அளிக்கும் வகையில் நடிகை ஸ்ருதி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவ்வாறு தனது கணவர் இறந்த அடுத்த நாளே மிகவும் துயரத்துடன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் ஸ்ருதி கூறியதாவது, தேவையில்லாத வதந்திகளை சில சோசியல் மீடியா சேனல்களும், நியூஸ் சேனல்களும் வெளியிட்டு வருகின்றனர். இதனால் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ரொம்பவும் காயப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும் என் கணவரை பற்றி தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் இந்த ஒரு வீடியோவை வைத்து உண்மையான செய்தியை மட்டும் வெளியிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
அதன் பிறகு என் கணவர் மாரடைப்பால் இறந்தது உண்மைதான் ஆனால் உடற்பயிற்சி செய்யும் பொழுது அவர் இறந்து விட்டார் என சிலர் சொல்வது உண்மை கிடையாது. அதேபோல் என் கணவர் சிவில் இன்ஜினியர் அவருக்கு பிட்னஸ் மீது ஒரு தனி ஆர்வம் இருக்கிறது. எனவே அது தவிர வேறு எதுவும் கிடையாது இந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையில் இருந்து நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வர முயற்சி செய்கிறோம் அரவிந்த் என்னை விட்டு எங்கும் செல்லவில்லை என்னுடனே தான் இருக்கிறார்.
வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் வயதானவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எனவே இதனால் உண்மை என்னவென்று தெரியாமல் எந்த செய்தியையும் பரப்ப வேண்டாம் இது எங்களை மிகவும் பாதிக்கிறது எனக்கூறி மிகவும் வருத்தத்துடன் ஸ்ருதி வெளியிட பலரும் இவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.