இப்படி பண்ணினால் தான் என் கணவர் வேலை செய்வார்.! வைரலாகும் வீடியோ.!!

shriya
shriya

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஸ்ரேயா. இவர் ஆரம்பத்தில் தெலுங்கு படமான வீரம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் ஹிந்தி, தெலுங்கு என பிற மொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக வலம் வந்தார். இதையடுத்து அவர் தமிழில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

படத்தில் அவர் சிறியதாக ஒரு ரோலில் நடித்து இருந்தாலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து தமிழ் சினிமா இவருக்கு பல வாய்ப்புகளை கொடுத்தது குறிப்பாக அழகிய தமிழ் மகன், சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம் போன்ற முன்னணி நடிகரின் படத்தில் நடித்த தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார். அவருக்கு இதையடுத்து சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து கொண்டு அவ்வப்போது தனது படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். கணவருடன் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு மேலும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்த நிலையில் தற்போது வீட்டிலேயே முடங்கி உள்ள ஸ்ரேயாவும்,அவரது கணவரும் வீட்டில் பண்ட பாத்திரங்களை கழுவும் பொழுது என்ன செய்கிறார்கள் நிங்களே பாருங்கள்.

இதோ வீடியோ.