தலைவர் பெயரில் உருவாகும் சீரியலில் கதாநாயகியாக கலக்கப்போகும் ஸ்ரேயா அஞ்சன்..! கதாநாயகன் யார் தெரியுமா..?

shriya-anjan-1
shriya-anjan-1

தற்போது ரசிகர்களை கவர்வதற்காகவே பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் புதுபுது சீரியல்களை உருவாக்குவது மட்டுமில்லாமல் அதில் நடிக்கும் கதாநாயகிகளை பல ஆண்டு ஆராய்ந்து அதன் பின்னர் தேர்வு செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதுபுது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் தெய்வம் தந்த வீடு, பூவே பேரன்பு போன்ற புதிய சீரியல்கள் மாலை நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் இதைத்தொடர்ந்து தற்போது புதிய சீரியல் ஒன்றியம் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆனது ஒளிபரப்ப ரெடியாக உள்ளது.

இவ்வாறு உருவாகும் இந்த சீரியலின் பெயர் திருமணம் என்ற பெயரில் ஒளிபரப்பப்படும் அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் கதாநாயகியாக ஸ்ரேயா அஞ்சன் நடிக்க உள்ளார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில்தான் தன்னுடன் இணைந்து நடித்த  சித்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அந்த வகையில் இவருடைய கணவர் தற்போது ராஜா ராணி சீரியலில் விஜய் டிவியில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இந்நிலையில் திருமணத்துக்கு பிறகு மீண்டும்  ஸ்ரேயா நடித்த தொடங்கியது பலருக்கும்  இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்று கூறலாம்.

மேலும் இந்த சீரியலில் நடிகை ஸ்ரேயாவுக்கு ஜோடியாக பிரபல நடிகர் அருண் கதாநாயகனாக நடிக்க உள்ளார் மேலும் இந்த சீரியலில் ப்ரீத்தா, ஸ்ரீலேகா போன்ற பல்வேறு பிரபலங்களும் உள்ளதன் காரணமாக இந்த சீரியலில் எதிர்பார்ப்பை ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இந்த சீரியலுக்கு தற்காலிகமாக ரஜினி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.