தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் மேலும் சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் இவர் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் விரைவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தற்பொழுது இவர் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் நடைபெற்று வருகிறது எனவே அங்கு சென்ற இவர் தன்னுடன் அழைத்து சென்ற செல்ல நாய்க்குட்டி உடன் விளையாடி மகிழும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
மேலும் தற்பொழுது இவர் தளபதி விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இந்நிலையில் தற்பொழுது இவர் புதிய திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். எனவே அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தான் நடிகைக்கு கீர்த்தி சுரேஷ் நாகர்கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது தன்னுடன் தனது செல்ல நாய்க்குட்டிகளையும் அழைத்து சென்ற நிலையில் படபிடிப்பு இல்லாத நேரத்தில் தன்னுடைய நாயுடன் விளையாடும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் கீர்த்தி சுரேஷ் கேப்டனாக கூடியது கடந்த சில நாட்களாக படப்பிடிப்பிற்காக நாகர்கோவிலில் தங்கி உள்ளேன்.
இங்கு தங்கி இருக்கும் நாட்களில் சில நல்ல நினைவுகளை சேமித்து வைத்துக் கொண்டேன் என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள வீடியோ சில மணி நேரங்களில் ஏழு லட்சத்துக்கும் அதிகமான லைக்குகள் மற்றும் ஆயிரக் கணக்கான கமெண்ட்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.