இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூல் செய்து விட்டது மேலும் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் உடன் தளபதி விஜய் தற்போது கைகோர்த்து பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
தளபதி விஜயின் திரைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவார்கள் இவரது திரைப்படங்கள் என்றால் அது திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை கூறவே வேண்டாம்.
பீஸ்ட் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படபிடிப்பில் தளபதி விஜய் விருவிருப்பாக நடித்து வருகிறார் இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் சமீபத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரான தோனி எதிர்பார்க்காத விதமாக தளபதி விஜய்யை பார்க்க சந்தித்துள்ளார்.
மேலும் பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு எதிரியாக இயக்குனர் செல்வராகவன் தான் நடிக்க போகிறார் என சமீபத்தில் தகவல் வைரலாகி வந்தது இப்பொழுது செல்வராகவன் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் முதலில் வேறு ஒரு இயக்குனர் தான் நடிக்க வேண்டும் என ஒரு தகவல் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
ஆம் யார் அந்த இயக்குனர் என்று கேட்டால் வேறு யாரும் இல்லை இயக்குனர் மிஸ்கின் தான் இவரிடம் தான் தளபதி விஜய்க்கு எதிரியாக பீஸ்ட் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க அணுகினார்களாம் ஆனால் மிஷ்கின் பிசாசு 2 திரைப்படத்திற்காக பிசியாக இருந்ததால் அவரால் நடிக்க முடியாமல் ஆகிவிட்டதாம் பின்புதான் செல்வராகவனுக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.