ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக 20 ஓவர் உலக கோப்பையை தொடங்க இருக்கிறது. ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்களின் முதல் கேள்வி என்னவென்றால் இந்த கோப்பையை கைப்பற்ற பல அணிகள் பல பலம் வாய்ந்த அணிகளாக இருக்கின்றன அதனால் எந்த அணி தொடரை வெல்லும் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணி தொடரை கைப்பற்ற வேண்டும் என்றால் இந்த முக்கிய இரண்டு வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே முடியும் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஆல் ரவுண்டர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய அணி உலக கோப்பை தொடரை கைப்பற்ற வேண்டும் என்றால் ரன் மிஷின் கோலி அடிக்க வேண்டும் என நாம் நினைக்கிறோம்.
ஆனால் உண்மையில் கோழியும் ஒரு மனிதர் தான் அவர் மிஷின் கிடையாது என சொல்லி உள்ளார் மேலும் இந்த உலக கோப்பை தொடரை கைப்பற்ற இந்திய அணியில் இரண்டு வீரர்களால் மட்டுமே முடியும் என கூறி உள்ளார். 20 ஓவர் கிரிக்கெட் பொறுத்தவரை மிக அனுபவம் வாய்ந்த வீரர் ரோகித் சர்மா எப்பொழுது வேண்டுமானாலும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மேட்ஜை மாற்றக்கூடிய வல்லமை படைத்தவராக இருந்து வருகிறார்.
இதுவரையில் நான்கு முறை 100 சதங்களை அடித்துள்ளார் அதனால் ரோகித் சர்மா மிக அபாயகரமான வீரராக பார்க்கப்படுகிறார் இவர் நினைத்தால் மட்டுமே ஆட்டத்தின் போக்கை எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றமுடியும் இவர் இந்திய அணிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிட்டார் அதுபோன்ற பவுலிங்கில் எந்த நேரத்திலும் ஆட்டத்தை மாற்றக்கூடிய வல்லமை படைத்தவராக இருப்பவர் பும்ரா. இவர் எப்போது வேண்டுமானாலும் எதிரணியை நடு நடுங்கச் செய்பவர்.
அதில் முக்கியம் பவர் பிளே 2 ஓவர்கள் கடைசி 2 ஓவர்கள் இவர் வீசினால் எதிரணி வீரர்கள் தடுமாறுவது ஆட்டத்தின் போக்கை மாற்றி விடுவார் என கூறினார் ஆகமொத்தம் விராட் கோலியை கோப்பையை கைப்பற்ற இந்த இரண்டு வீரர்கள் மட்டுமே உதவ முடியும் என கூறி உள்ளார் ஜான்டி ரோட்ஸ்.