தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் ரஜினி இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சிறிது மாதத்தில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலகிக் கொள்வதாக சோசியல் மீடியாக்களில் தெரிவித்து வருகிறார்.
கடந்த 30 வருடங்களாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்தவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினியின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதன் பிறகு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான வை ராஜா வை என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். பின்னர் கடந்து எட்டு வருடங்களாக எந்த ஒரு படத்தையும் இயக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். மேலும் லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
மேலும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு இன்னும் சிறிது மாதத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஃப்ரீ ப்ரோடக்ஷன் பணிகளின் போது கருத்து வேறுபாடு காரணமாக லால் சலாம் படத்திலிருந்து பணிபுரிய எனக்கு விருப்பமில்லை என்று ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவு படக்குழுவினரை அதிர்ச்சியாக்கி உள்ளது.