Vetrimaran : தமிழ் சினிமாவில் தோல்விய காணாத இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் இதுவரை எடுத்த பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து சூரி, விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்னும் படத்தை எடுத்தார்.
படம் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டார் அதன்படி முதல் பாகம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து விடுதலை பார்ட் 2 அதிரடியாக உருவாகி வருகிறது இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்து விட்டேன்.
என பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனியார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். வெற்றிமாறனின் ஆடுகளம், பொல்லாதவன் போன்ற படங்களில் வெற்றி மாறன் உடன் இணைந்து பணியாற்றி உள்ளார் ஒரு தடவை இவர் கிரிக்கெட் சம்பந்தமான ஒரு கதையை கூறி இருக்கிறார்.
அது ரொம்ப பிடித்து போகவே ஜி.வி பிரகாஷ் ஓகே சொல்லி எல்லாம் ரெடியானதாம் ஆனால் திடீரென தயாரிப்பு சைடுல இருந்து சில பிரச்சனைகள் வர படம் டிராப்பானதாக கூறினார். ஆனால் வருங்காலத்தில் நிச்சயம் வெற்றிமாறுடன் இணைந்து படம் பண்ணுவேன் என கூறியுள்ளார்.
ஜி.வி பிரகாஷ் இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் நிச்சயம் நடக்கும் நீங்களும் வெற்றி மாறனும் இணைந்து ஒரு மிகப்பெரிய ஒரு வெற்றி படத்தை கொடுப்பீர்கள் இந்த படமே மீண்டும் ஸ்டார்ட் ஆனால் நல்லது ஏனென்றால் இயக்குனர் வெற்றி மாறன் படைப்புகளில் இது ஒரு வித்தியாசமான படைப்பாக வந்து இருக்கும் எனக் கூறிய ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.