பக்கா லோக்கலாக களமிறங்கிய சூர்யா கார்த்திக்..! பருத்திவீரன் கெட்டப்பில் வெளிவந்த சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்..!

surya-and-karthi

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கார்த்திக்  இவர் சினிமாவில் முதன் முதலாக பருத்தி வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானார் இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி திரை பலமாக அமைந்துவிட்டது.

இந்நிலையில் நடிகர் கார்த்திக் தற்போது முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் கிராமத்து கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் திரைப்படம் என்பதன் காரணமாக திரைப்பட படப்பிடிப்பு மதுரை போன்ற இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக பிரபல பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்க உள்ளார். அதேபோல சூர்யாவும் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.  அந்த வகையில் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஆக்ரோசமான காட்சிகள் பல இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த வகையில் தற்போது சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே வேஷ்டியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது அந்த வகையில் இருவரும் ஆக்ரோஷமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பது மட்டும் நன்றாக தெரிந்துள்ளது என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

surya
surya