வாரிசு படபிடிப்பு தளத்திலிருந்து லீக்கான சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்..! இப்படி ஒரு செயலை செய்தது பிரபல நடிகையா.?

vijay-11
vijay-11

தமிழ் சினிமாவில் மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நடிகர் சமீபத்தில் தன்னுடைய நாற்பத்தி எட்டாவது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். இவ்வாறு இவருடைய பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும் நட்சத்திரங்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபலங்கள் பலரும் புது புது வகையான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வது மட்டுமில்லாமல் இவ்வாறு வெளிவரும் புகை படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். அந்தவகையில் தற்போது வெளிவந்த காமன் டிபி ஆனது பலரின் வாட்ஸ் அப்பில் டிபி ஆக அமைந்துள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தளபதி விஜய் நடித்து வரும் தனது 66ஆவது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளிவந்து ரசிகர்களை  மெய்சிலிர்க்க வைத்துள்ளது அந்த வகையில் இந்த போஸ்டர் பல ரசிகர்களையும் கவரும் ஒரு சில தரப்பினர் பல்வேறு விமர்சனங்களை வீசி வருகிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பின்னணியிலுள்ள புகைப்படம் கூகுளில் இருந்து எடுக்கப்பட்டது என ஒரு புதிய சர்ச்சை உருவானது மட்டுமில்லாமல் இதை வைத்து பல்வேறு விதமாக தளபதி விஜய்யை கலாய்த்து வருகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்த  நிலைகள் ரசிகர்கள் பல்வேறு பிரபலங்கள் நட்சத்திரங்கள் என அனைவரும் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருவது மட்டுமில்லாமல் தற்போது தளபதி நடித்து வரும் வாரிசு திரைப்படத்தை பற்றிய ஒரு அப்டேட் வெளிவந்துள்ளது.

அந்த வகையில் பிரபல நடிகை குஷ்பு அவர்கள் வாரிசு திரைப்படத்தின் பொழுது ஷூட்டிங்கில் தளபதி விஜயுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு அவர் புகைப்படத்தை வெளியிட்டது மட்டுமில்லாமல் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.