தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிம்பு. அண்மைகாலமாக சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மேலும் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வருகிறார் காரணம் தனது உடம்பை முற்றிலுமாக மாற்றிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தனது எண்ணங்களையும் மாற்றி அமைத்துக்கொண்டு தற்போது வெற்றி கண்டு வருகிறார்.
முதலாவதாக ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து அண்மையில் சிம்பு நடித்த படம் மாநாடு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது மேலும் அப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது இந்த படத்தை வெங்கட்பிரபு எடுத்து அசத்தி இருந்தார்.
அதன் பின் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் வெகுவிரைவிலேயே முடிக்கப்பட்டு டப்பிங் பணிகளை நோக்கி நகரும் என தெரியவந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் சிம்பு.
கொரோனா குமார், பத்து தல மற்றும் பல்வேறு சிறந்த இயக்குனர்களிடம் கதை கேட்டு உள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை நோக்கி ரசிகர்கள் காண பெரிய அளவில் எதிர்நோக்குகின்றனர் இந்த படத்தில் இருந்து வெளிவந்த டீசர் நல்ல வரவேற்பை பெற்றதை..
தொடர்ந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது இந்த நிலையில் நடிகர் சிம்பு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பைக்கில் செம்ம மாஸாக உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதை நீங்களே பாருங்கள் செம்ம மாஸாக இருக்கும் நடிகர் சிம்பு.
On the sets of #VTK #VendhuThanindhathuKaadu 🎥 🎬 pic.twitter.com/3j5lB4AKq2
— Silambarasan TR (@SilambarasanTR_) February 9, 2022