“பீஸ்ட்” படத்தால் தனுஷின் “நானே வருவேன்” படத்தின் ஷூட்டிங் தள்ளிவைப்பு.? காரணம் இந்த இயக்குனர் தான்.

naanve-varuven-
naanve-varuven-

நடிகர் தனுஷ் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருவதால் தற்பொழுது அஜித் விஜய் ஆகியவர்களுக்கு பிறகு சிறப்பான இடத்தை தன்வசப்படுத்த ரெடியாக இருக்கிறார் மேலும் வருடத்திற்கு மூன்று நான்கு படங்களை கொடுத்து வருவதால் ரசிகர்கள் மற்றும் மக்களும் இவரைப் பற்றி பேசிக் கொண்டே வருகின்றன.

தனுஷ் கார்த்திக் யாருடன் கூட்டணி அமைத்து மாறன் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் அதை முடித்த கையோடு அவர் தெலுங்கில் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளதால் அதை முடித்த பிறகு தனுஷ் வெகு விரைவிலேயே அண்ணன் செல்வராகவனுடன் கைகோர்த்து நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இருவரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் சூட்டிங்கை தொடங்கலாம் என பேசி வைத்த நிலையில் தற்பொழுது தனுஷ் வேறொரு படங்களில் நடித்தாலும் ஆகஸ்ட் மாதத்திற்குள் எல்லாத்தையும் முடித்து விடலாம் என கணக்கு போட்டு வைத்தாராம்.

ஆனால் செல்வராகவனும் இயக்குனர் தொழிலையும் தாண்டி மற்ற படங்களில் நடிக்க தொடங்கி உள்ளதால் அந்த தேதியில் சரியாக சோதனை நடத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் தள்ளி வைத்துள்ளனர்.

செல்வராகவன் அதிலும் குறிப்பாக பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக  நடித்து வருவதால் தனுஷின் நானே வருவேன் ஷுட்டிங்கை நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.