தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால் ஆரம்பத்தில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் நீங்கா இடத்தை பிடித்தார். ஆனால் ஒரு கட்டத்தில பட வாய்ப்புகள் அதிகமாக வர தொடங்கினால் படத்தை விட்டு விட கூடாது என்பதற்காக கதையை சரியாக தேர்ந்தெடுத்து நடிக்காமல் போனார்.
மேலும் அந்த படங்களும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. தற்போது சினிமா உலகில் வெற்றியை கொடுக்க போராடி வருகிறார் மேலும் அவரது ரசிகர்களும் தற்போது செம அப்செட்டில் இருக்கின்றன அதை உணர்ந்து கொண்டு சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது எனிமி என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யாவை மிரட்டி உள்ளார் மேலும் மிருணாளினி ரவி, மம்தா ஆகியோர்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஷால் தனது 32வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரபல நடிகையான சுனைனா நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது இவர்கள் இருவரும் இதற்கு முன்பாக சமர் திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது தற்பொழுது ஒன்பது வருடங்கள் கழித்து விஷாலுடன் மீண்டும் இணைகிறார் நடிகை சுனைனா.
விஷாலின் 32வது திரைப் படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு புகைப்படம் கூட வெளியாகியுள்ளது இதோ விஷால் சுனைனாவும் இருக்கும் க்யூட் புகைப்படம் இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக தற்போது மாறியுள்ளது.