தல அஜித் அவர்கள் சமீபகாலமாக சமூக அக்கறை உள்ள படங்களை கொடுத்து வருகிறார் அதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு நடித்த நேர்கொண்ட பார்வை படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் அஜித்திற்கு ஒரு நல்ல இமேஜை ஏற்படுத்தியது.
இதன் மூலம் பெண் ரசிகர்களை பலரையும் கவர்ந்தது இதனை தொடர்ந்து மீண்டும் ஹச். வினோத்துடன் இணைந்து அஜித் அவர்கள் தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இக்கூட்டணி மீண்டும் கூடியதால் மக்கள் மத்தியில் இப்படத்தின் எதிர்பார்ப்பு சற்ற அதிகரித்துள்ளது. இப்படத்தின் சூட்டிங் ஹைதராபாத் மற்றும் சென்னையில் மாறிமாறி எடுக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா தொற்றுக் காரணமாக படப்பிடிப்பு தடைசெய்யப்பட்டது.
இப்படம் குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன தினம்தோறும் அந்த வகையில் இப்படத்தில் மூன்று வில்லன்கள் நடிக்கிறார்கள் அதில் ஒருவர்தான் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா என கூறப்படுகிறது.மேலும் ஹீமா குரோஷி அவர்கள் இப்படத்தில் அஜித்துக்கு ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தெரியவருகிறது.
இப்படத்தின் ஷூட்டிங் தற்போது 80% பர்சன்டேஜ் முடிவடைந்த நிலையில் மீதி படப்பிடிப்பு படக்குழுவினரின் நலன்கருதி தற்பொழுத நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் அந்தந்த மாநில அரசு அனுமதி அளிக்கும் வகையில் சூட்டிங் எடுக்கப்பட்டது என தெரியவந்தது தற்போது ஹைதராபாத்தில் அஜித் இல்லாமல் மற்ற காட்சிகளை படமாக எடுக்க போனிகபூர் அவர்கள் திட்டமிட்டு உள்ளார்.
இத்திரைப்படத்தை போனிகபூர் அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டு உள்ளார் இதனால் வசூல் மிகப்பெரிய அளவில் குவிக்க முடியும் என்பது அவரது கணிப்பாக இருந்து வருகிறது எனவே இப்படத்தின் எதிர்பார்ப்பு பட்டிதொட்டி எகிறி உள்ளது.