காமெடிக்கு பெயர்போன வடிவேலு. இதுவரை அஜித், விஜய், ரஜினி, கமல் சூர்யா, தனுஷ் போன்ற டாப் ஹீரோ படங்களில் நடித்து அசத்தி உள்ளார். இருப்பின்னும் கடந்த நான்கு வருடங்களாக தமிழ் சினிமா உலகில் நடிக்காமல் இருந்தார் ஒருவழியாக அந்த பிரச்சனையை லைக்கா நிறுவனம்.
பேசி வடிவேலுவை அந்த பிரச்சனையில் இருந்து எடுத்தது அதனால் வடிவேலு லைக்கா நிறுவனத்தில் தொடர்ந்து ஐந்து படங்களை பண்ணுவதாக ஆரம்பத்திலேயே ஒத்துக்கொண்டார் முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டது.
இந்த படத்தின் பாடல் மற்றும் நடிகைகளை தேர்வு செய்வதற்காக லண்டன் எல்லாம் படக்குழு போய் வந்தது இப்படி படக்குழு தீவிரமாக வேலை செய்து ஒரு வழியாக இறுதிகட்டத்தை எட்டியுள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் நாய்சேகர் ரீட்டன்ஸ் படப்பிடிப்பு பாதியிலேயே நின்று உள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் ஒரு வதந்தி பரவி வருகிறது.
இதைப்பார்த்த வடிவேலு படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் இன்னும் பாதி இருக்கிறது என ஒரு செய்தி வெளி வருவதை கண்டு தனக்கு ரொம்ப கஷ்டமாக இருப்பதாக கூறினார். வடிவேலு இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துக் கொண்டார்.
வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து மாமன்னன் மற்றும் பெயரிடப்படாத பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடிக்க உள்ளார் முதலில் நாய் சேகர் ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுக்கும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.